வெள்ளை மாளிகையில் மேலும் 4 ஆண்டுகள் ட்ரம்புக்கு இடமளித்தால் பூமியை நாம் மீட்க முடியாது – ஜோ பைடன்
டொனால்ட் ட்ரம்புக்கு மேலும் நான்கு ஆண்டுகள் வெள்ளை மாளிகையில் அவகாசம் அளித்தால் நமது பூமியை நாம் மீட்கவே முடியாது என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பைடன்அவர்கள் டிரம்ப் குறித்த கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், சுகாதார பாதுகாப்பு என்பது அனைவரது உரிமை என்று தான் நம்புவதாகவும், ஆனால் டொனால்ட் டிரம்ப் அது ஒரு சிலரது பாக்கியம் என்று நம்புவதாக குற்றம்சாட்டினார் .
டொனால்ட் டிரம்பிற்கு வெள்ளை மாளிகையில் இன்னும் நான்கு ஆண்டுகள் அவகாசம் அளித்தால், அவர் நமது தேசத்தின் தன்மையை மாற்றுவார் என்றும், நமது பூமியை அதிலிருந்து மீட்க முடியாது. அதை நாம் அனுமதிக்க கூடாது. டொனால்ட் டிரம்ப் யார் என்பது அனைவருக்கும் தெரியும் இனி நாம் யார் என்பதை அவர்களுக்கு காண்பிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
I believe health care is a right for all.
Donald Trump believes it’s a privilege for the few.
It’s that simple, folks.
— Joe Biden (@JoeBiden) November 3, 2020
If we give Donald Trump another four years in the White House, our planet will never recover.
— Joe Biden (@JoeBiden) November 3, 2020
Everybody knows who Donald Trump is.
Let’s show them who we are.
We choose hope over fear. Unity over division. Science over fiction. And truth over lies.
— Joe Biden (@JoeBiden) November 3, 2020
If we give Donald Trump another four years in the White House, he will forever alter the character of our nation.
We can’t let that happen.
— Joe Biden (@JoeBiden) November 3, 2020