இரு வெவ்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 56 கிலோ கஞ்சா.!
புதுக்கோட்டையின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இருந்து 56 கிலோ கஞ்சாவை மீனவர்கள் மீட்டு கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்கு புதுக்குடி கிராமத்திலிருந்து சில மீனவர்கள் பாலமுருகன் என்பவரது பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது,உப்பு படிவத்துடன் சாக்குப் பொட்டலம் ஒன்று மிதந்து வருவதை கண்டுள்ளனர் . அதனை மீட்டு கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் உடனடியாக கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் பிரித்து போது கஞ்சா பொட்டலங்கள் காணப்பட்டது .
இதே போன்று வடக்கு புதுக்குடியில் மீனவர்கள் கடலுக்கு சென்ற போது கடலில் மிதந்த சாக்கு மூட்டையை கரைக்கு கொண்டு வந்து கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் தகவல் தெரிவித்தனர் . அந்த மூட்டையில் 15 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது . இந்த நிலையில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு பொட்டலங்களிலும் 56 கிலோ கஞ்சா இருந்ததாக போலீசார் தெரிவித்ததை அடுத்து சிவகங்கை மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவிற்கு கடலோர பாதுகாப்பு குழுமம் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் விரைந்து வந்தார். அதனையடுத்து மீட்கப்பட்ட கஞ்சா நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.