பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க வேண்டும் -மு.க. ஸ்டாலின்
நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அவசர கோலத்தில் அறிவித்திருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.நோய்க்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள், பள்ளி / கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 16-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு.
தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அவசர கோலத்தில் அறிவித்திருக்கிறார்.மாணவர்களின் பாதுகாப்பு ,விடுதி -உணவு போன்றவற்றை குறித்த குழப்பங்கள் நிலவுகின்றன.கொரோனாவின் இரண்டாவது அலை குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளி நாடுகளில் ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், துவக்க பள்ளிகளை விட உயர்நிலை பள்ளிகளில் பாதிப்பு அதிகம் என கண்டறிந்துள்ளது.மாணவ, மாணவிகளின் உயிர் பாதுகாப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது.பெற்றோர் – ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும். பொங்கல் விடுமுறை முடிந்து 2021 ஜனவரி இறுதியில் அப்போதிருக்கும் சூழ்நிலைகளை ஆய்வு செய்து பள்ளிகளை திறக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பை நிறுத்தி வைத்து, மாற்று அறிவிப்பை வெளியிட்டு மக்களின் மனப்பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பில் அவசரகோலமான அறிவிப்பு ஏன்? #COVID19 குறித்த ஆராய்ச்சிகள், எச்சரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டனவா?
பெற்றோர்- ஆசிரியர்- மருத்துவர்களுடன் ஆலோசனைகளைச் செய்தாரா @CMOTamilNadu?
ஜனவரி 2021-ல் அப்போதைய சூழலை ஆய்ந்துதான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும். pic.twitter.com/pWBggQXLW2
— M.K.Stalin (@mkstalin) November 3, 2020