பேரறிவாளன் மனு: ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது : உச்சநீதிமன்றம்
பேரறிவாளன் கருணை மனு மீது இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது, பேரறிவாளன் கருணை மனு மீது இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஆளுநர் சட்டப்படியான முடிவுகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 23-ஆம் தேதி ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.