துருக்கி நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 100-ஐ எட்டியது!
துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியது.
துருக்கியில் உள்ள ஏகன் தீவு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, 7.1 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால், இஸ்மியர் நகரமே உருக்குலைந்த நிலையில் காணபடுகிறது.
அங்கு 400-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், மீட்பு குழுவினர் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியுள்ளது.
மேலும், 1,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், பொதுமக்களும் இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.