இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக குறைந்துகொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 8,266,914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 123,139 பேர் உயிரிழந்துள்ளனர். 7,601,429 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 37,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 497 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 542,346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டு தான் செல்கிறது என்பதை நாம் இதன் மூலமே அறியலாம், 50ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை இருந்த தின தொற்று தற்போது 30-40 ஆக மாறியுள்ளது.