அமெரிக்க பாடபுத்தகத்தில் இடம்பெற்ற “Forest man of India” வியக்கவைக்கும் விவசாயி

Default Image

தரிசு மண்ணில் 550 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு காட்டையே  உருவாக்கிய  ’Forest man of India’ என்று அழைக்கப்படும் அசாமைச் சேர்ந்த 57 வயது விவசாயி ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு அமெரிக்க பாடப்புத்தகங்களில் பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது.

கிழக்கு அசாமில் பகுதியில் மஜூலித் தீவின் சுற்றுச்சூழல் கெடுவதை கண்டு சிறுவயது முதலே கவலைகொண்ட  ஜாதவ் பயேங், மரங்களை நடத்தொடங்கினார்.

அம்மரங்கள் காடுகளாக வளரும் வகையில் தனது அயாராத உழைப்பினால்  550 ஹெக்டர் பரப்பளில்  காட்டை உருவாக்கியுள்ளார்.

இவர் உருவாக்கிய காட்டில் யானை, காண்டாமிருகம், புலி என பல விலங்கினங்களும் வாழத்தொடங்கி வருகிறது.

விவசாயி ஜாதவ் பயேங் சாதனையை சிறப்பிக்கும் வகையில் பத்மஸ்ரீ பட்டமும், கர்மயோகி விருது வழங்கப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்காவின் பிரிஸ்டெல் கனெக்டிக்கட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் அசாம் ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

அங்கு பயிலும் மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வியில் ஒரு பகுதியாக விவசாயி ஜாதவின் சாதனைகளைக் குறித்து படிக்கிறார்கள் என்று அங்கு பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி ஆசிரியர் நவாமி சர்மா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்