சர்வதேசம் உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது..
சர்வதேச அரசியலே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் 4 வருடத்திற்கு ஒரு முறையும் நவம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம்.அதனடிப்படையில் இன்று அமெரிக்க தேர்தல் நடைபெற உள்ளது.
அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி இந்த இரு கட்சிகள் தான் அமெரிக்க அரசியலில் பல வாய்ந்த கட்சிகள் ஏன் அமெரிக்க அரசியல் தலையெழுத்தையே அடுத்த 4 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கும் கட்சிகளாகும்.
நடப்பாண்டு அதிர்பர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் (74) 2வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (78) போட்டியிடுகிறார்.இன்று அங்கு விறுவிறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.