16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு
ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறையை சரி செய்ய, தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6,000 கோடி விடுத்துள்ளது மத்திய நிதியமைச்சகம்.
நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநில அரசுகளுக்கு வழங்க போதுமான நிதியில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.ஜிஎஸ்டி வரி வசூல் குறைவாக இருப்பதால், தற்போது இழப்பீடு தொகையை வழங்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.ஆனால் மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இழப்பீட்டு நிதியை வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக பல்வேறு மாநில அரசுகள் குற்றம்சாட்டியது.
இதனைத்தொடர்ந்து முதல் தவணையாக ரூ .6,000 கோடி இழப்பீடு வழங்குவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது.அதன்படி ஆந்திரா, அசாம், பீகார், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 16 மாநிலங்களுக்கும், இரண்டு யூனியன் பிரதேசங்கள் டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு முதல் தவணையாக ரூ .6,000 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் தவணையாக ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறையை சரி செய்ய 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6,000 கோடி விடுத்துள்ளது மத்திய நிதியமைச்சகம்.அதன்படி ,ஆந்திரா, அசாம், பீகார், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய 16 மாநிலங்களுக்கும்,டெல்லி ,ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் இழப்பீடு விடுவிக்கப்பட்டுள்ளது.