மகாராஷ்டிரா துணை முதல்வர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் .!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது, கொரோனா வைரஸுக்கு நெகட்டிவ் என்று பரிசோதித்த பின், அஜித் பவார் இன்று ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இதை தெரிவிக்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில், அடுத்த சில நாட்களுக்கு அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார் என்றும், விரைவாக குணமடைய விரும்பியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
राज्यातील कोट्यवधी जनता व कार्यकर्त्यांची प्रार्थना तसंच डॉक्टर,नर्स,सपोर्ट स्टाफच्या प्रयत्नांमुळे मी कोरोनामुक्त होऊन रुग्णालयातून आज घरी परतलो आहे.डॉक्टरांच्या सल्ल्यानुसार,काही दिवस घरी विलगीकरणात राहणार आहे. माझ्या उत्तम प्रकृतीसाठी सदिच्छा व्यक्त करणाऱ्या हितचिंतकांचे आभार!
— Ajit Pawar (@AjitPawarSpeaks) November 2, 2020