#HeavyRain: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெரய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 28 ஆம் தேதி முதல், வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. அதன் படி, சில நாட்களாக சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வருகின்ற 4,5ஆம் தேதிகளில் தமிழகத்தின் மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.