பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி ! அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை
பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.நோய்க்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள், பள்ளி / கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 16-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு.
தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ,இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.