சகோதரிகளை தொட்டால் இனி இறுதிஅஞ்சலி..லவ் ஜிகாத்துக்கு எதிர்த்து சட்டம்-யோகி எச்சரிக்கை

Default Image

உத்தரப்பிரதேச மாநிலத்தில சகோதரிகளின் வாழ்க்கையில் விளையாடும் கயவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும் என்றும் லவ் ஜிகாத்தைத் தடுப்பதற்கும் கடும் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்று  முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

 

லக்னோ ஜூனாபூரில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடும் சட்டம் இயற்றப்படும் என்றும் எங்கள் சகோதரிகளின் அடையாளத்தையும், மாண்பையும் குலைக்கின்ற் வகையில் செயல்படுபவர்களுக்கு  இறுதி ஊர்வல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் சமீபத்தில் தான்  அலகாபாத் நீதிமன்றம் ஓர் வழக்கில் தீர்ப்பளித்தது . மதம்மாறி திருமணம் செய்த இஸ்லாமிய பெண், போலீஸ் பாதுகாப்புக் கோரி  மனுத்தாக்கல் செய்தனர்.

திருமணமான பெண் பிறப்பால் ஒரு முஸ்லிம், ஆனால் திருமணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன் இந்து மதத்துக்குமாறி உள்ளார். திருமணம் செய்வதற்காக மதம்மாற முடியாது என்று இவ்வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்து மனுவைத் தள்ளுபடி செய்ததை இங்கு கூறுகிறேன் என்று தெரிவித்தார்

இந்நிலையில் இம்மனுவை விசாரித்த நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி திருமணம் செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன் மணப்பெண் இந்து மதத்துக்கு மாறியுள்ளார், அதன்பின் திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்  என்பது குறிப்பிடத்தக்கது,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்