#ஆக்கிரமீப்பு காஷ்மீர்_கில்கிட்-பல்டிஸ்தானுக்கு பாகிஸ்தான் மாகாண அந்தஸ்து…

Default Image

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிகளுக்கு பாகிஸ்தான் மாகாண அந்தஸ்து வழப்படும் என்று அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவின் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் கில்கிட் பகுதிக்குச் சென்றார். அங்கு கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிகளுக்கு  தற்காலிகமாக பாகிஸ்தான் மாகாண அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்ரான் கானின் இந்த அறிவிப்பிற்கு இந்தியா சார்பில், கடும் எதிர்ப்பு தெரிக்கப்பட்டுள்ளது.  இது குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா  கூறுகையில்  கில்கிட்-பல்டிஸ்தான்  மட்டுமின்றி  காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்

கடந்த 1947 ஆண்டு இந்தியாவுடன் காஷ்மீர் சட்டரீதியாக இணைந்தபோதே அது உறுதியாகிவிட்டது.ஆகவே பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருக்கும் ஆகிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பல்டிஸ்தான் மீது பாகிஸ்தானுக்கு எந்தவித ஒரு அதிகாரமும் கிடையாது.

தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பையும், அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களையும் மறைக்கவே பாகிஸ்தான் தற்போது இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்த அறிவிப்பை இந்தியா நிராகரிக்கிறது.மேலும் அப்பகுதிகளில் மாற்றம் செய்யவதாக நாடகம் ஆடுவதற்கு பதிலாக, பாகிஸ்தான் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்