KKR vs RR: விறுவிறுப்பான ஆட்டம்.! 60 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி.!

Default Image

ராஜஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா.

ஐபிஎல் தொடரின் 54-ஆம் போட்டியில் இன்று கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய மோர்கன் 35 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் நின்றார். ராஜஸ்தான் அணியில் பந்துவீச்சை பொறுத்தளவில் ராகுல் திவேதியா 3, கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ராபின் உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக்ஸ் சொற்ப ரன்களில் அட்டமிழந்து தடுமாற்றத்தை கொடுத்தனர். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெளியேறினர். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டு இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 35 ரன்களும், ராகுல் திவேதியா 31 ரன்களும் அடித்தனர். கொல்கத்தா பந்துவீச்சை பொறுத்தளவில் பாட் கம்மின்ஸ் 4, சிவம் மாவி மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 14 போட்டிகளில் கொல்கத்தா 7 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இது நிரந்தரம் அல்ல இனி வரக்கூடிய போட்டிகள் பொறுத்தே இது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list