தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!
மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை அடுத்த 48 மணி நேரத்திற்கு பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், லேசான மழையோ அல்லது மிதமான மழையோ பிற தென் தமிழக மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் பெய்ய உள்ளதாகவும், சென்னையின் ஒரு சில இடங்களில் வான மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஏனைய இடங்களில் லேசான மழை பெய்ய கூடும்.
மேலும், காரைக்கால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.