ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு இனப்பெருக்கத்திற்காக 105 காளை மாடுகள் வரவழைப்பு.!
ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு இனப்பெருக்கத்திற்காக 105 காளை மாடுகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் இருந்து கத்தார் தலைநகர் தோகா வழியாக வந்த சரக்கு விமானத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த 105 காளை மாடுகளை இனப்பெருக்கத்திற்காக சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்ககப்பிரிவு முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சுமார், 3 மணி நேரம் பரிசோதனை செய்யப்பட்ட சுமார் 300 கிலோ வரை எடையுள்ள அந்த காளைகளை சென்னையில் உள்ள தேசிய பால் மேம்பாட்டு கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சில காலம் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அந்த காளைகள் இனப்பெருக்கத்துக்கு உட்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.