கேரளாவின் 9 மாவட்டங்களில் நவம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 6,638 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதில் 5,789 பேருக்கு உள்ளூர்ப் பரவல் மூலம் நோய்த் தொற்று பரவியுள்ளது.ஆனால் மீதமுள்ள 700 பேருக்குத் தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரம் தெரியவில்லை.
மேலும் கொரோனாவால் நேற்று மட்டுமே 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,457 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கேராளாவின் 9 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டித்து உத்திரவிடப்பட்டுள்ளது .ஆம் கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா உள்ளிட்ட கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.