தனியாக வீட்டிலிருந்த 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 62 வயது முதியவர் கைது!
தனியாக வீட்டிலிருந்த 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 62 வயது முதியவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வயதானவர்கள் என்றாலே பாவம் போல பார்க்கக்கூடிய காலம் போய், தற்பொழுது அவர்களையும் இரக்கமின்றி பலாத்காரம் செய்ய கூடிய கொடூரர்கள் இந்த உலகத்தில் நிறைந்துவிட்டார்கள்.
80 வயதுடைய நாகம்மாள் எனும் மூதாட்டி கணவனை இழந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது அண்டை வீட்டில் 62 வயதான பார்த்திபன் எனும் முதியவரும் வசித்து வருகிறார். இந்நிலையில், குடிபோதையில் இருந்த பார்த்திபன், நாகம்மாள் வீட்டில் தனியாக இருக்க கூடிய நேரம் பார்த்து, அவரது வீட்டுக்குள் புகுந்து நாகம்மாளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
பயந்து போய் அலறிய நாகம்மாள் சத்தம் வெளியில் கேட்டதால், அவரது பேரன் அங்கு வந்து பார்த்திபனை தள்ளிவிட்டு நாகம்மாளை காப்பாற்றியுள்ளார். போதையில் இருந்த பார்த்திபனை பேரன் எச்சரித்தும், உங்கள் வீட்டிலுள்ள அனைவரையும் கொன்று விடுவேன் என பார்த்திபன் மிரட்டியதால் நாகம்மாள் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் பார்த்திபனை போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.