தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

Default Image

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

தமிழக கடற்கரை தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை அதிரடியாக தொடங்கியுள்ள நிலையில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னனை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலையை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்