6 கோடி அல்லது 2 கோடி கொடு – தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பல்!

6 கோடி அல்லது 2 கோடி கொடு என திருச்சியிலுள்ள தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பலிடமிருந்து சிறுவனை மீட்ட காவல்துறையினர்.
திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் கண்ணப்பனின் மகன் தான் 12 வயது சிறுவன் முத்தையா. இவன் நேற்று மாலை வீட்டுக்கு வெளியில் நின்று விளையாடிக்கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். சிறுவனை வெகுநேரமாக காணவில்லை என பெற்றோர்கள் தேட ஆரம்பித்த போது, தொழிலதிபரின் நம்பருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எடுத்து பேசிய போது, உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம் 6 கோடி பணத்தை கொடுத்துவிட்டு கூட்டி செல்லுங்கள் என கூறியுள்ளனர்.
இதனால் பதற்றமடைந்த தொழிலதிபர் மகனை விடுமாறு கெஞ்சியதுடன், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனவும் கூறியுள்ளார். எனவே அந்த கடத்தல் கும்பல் 2 கோடியாக குறைத்து கேட்டுள்ளது. உடனடியாக காவல்துறையினரின் உதவியை நாடிய தொழிலதிபர் இது குறித்து கூறியுள்ளார். பின் காவல்துறையினரின் வழிகாட்டுதல்படி அவர்கள் அழைத்த இடத்திற்கு செல்ல காவல்துறையினரும் சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு சென்று பார்த்தால் கடத்தப்பட்ட சிறுவன் காரில் இருந்துள்ளார், கடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர். சிறுவனை மீட்ட காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். கார் உரிமையாளர் யார் என்பதை அறிந்த போலீசார் அவரிடம் விசாரிக்க, தனது நண்பர் தான் காரை வாடகைக்கு வாங்கி சென்றதாக கூறியுள்ளார். யார் அந்த நண்பர் என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025