ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை – ராமதாஸ்

ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதித்து வருகிறார்.
ஆளுநரின் இந்த செயலை கண்டித்து, அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்.ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘7.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் குறித்து, தொடர் அழுத்தங்கள் கொடுத்தும் ஆளுநர் இன்னும் கையெழுத்திடவில்லை. ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை என்ற அண்ணாவின் வார்த்தைகள், மிகவும் சரியானவை என்பதை இது உறுதி செய்கிறது.
7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு தமிழக ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏன்? இதற்கான இளைஞர்களின் பதிலை நான் எதிர்பார்க்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். மேலும், தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாக கொண்டு, மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025