ரஹ்மானுடன் கைகோர்க்கும் தனுஷ் மாஸ் அப்டேட்
இசைபுயல் AR ரகுமானின் இசையமைப்பில் நடிகர் தனுஷ் முதல்முறையாக பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனது தனித்திறமையால் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவூட், ஹாலிவூட் என்று கலக்கி வருபவர்.
இவர் தற்போது பாலிவுட்டில் இயக்குநர் ஆனந்த எல் ராய் இயக்கத்தில் அட்ராங்கி ரே என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஜ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தில் பாடல் ஒன்றை பாடவுள்ளதாகவும் இதனை உறுதி செய்யும் வகையில் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இப்படத்தில் தனுஷ் உடன் பாலிவூட் பிரபலங்களான அக்ஷயகுமார் சாரா அலிகான் உள்ளோட்டோரும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..