குஜராத்தின் முன்னாள் முதல்வர் காலமானார்!
குஜராத்தின் முன்னாள் முதல்வர் காலமானார்.
முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலுக்கு சென்ற மாதம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின், அவரது உடல் நலம் முன்னேற்றம் கண்டது.
இந்நிலையில், நேற்று இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சற்றுமுன் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.