கல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் நியமனம் ரத்து -உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி கல்வி இயக்குனராக சி.பூரணசந்திரன் நியமனம் செய்யப்பட்டார்.இவரது நியமனத்தை எதிர்த்து திருவாரூர் திரு.வி.க. கல்லூரி முதல்வர் கீதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ,தமிழக கல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உரிய விதிமுறைகளை பின்பற்றி 3 மாதங்களில் கல்லூரி கல்வி இயக்குநரை நியமிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.