பிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி!
பிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி.
சென்னை புதுவண்ணார்பேட்டை, இந்திரா நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுஷ்மிதா(23). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில், இவர் 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு கர்ப்ப காலத்தில் அடிக்கடி வயிறுவலி ஏற்படுவதுண்டு.
இதனையடுத்து, சுஷ்மிதா தனக்கு அடிக்கடி வயிறுவலி ஏற்படுவதாக, வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள், பிரசவம் ஆகும்வரை இப்படி தான் இருக்கும், பொறுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து, சுஷ்மிதா, நேற்று முன்தினம் தான் தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு மற்றோரு அறைக்கு சென்ற அவர், பிரசவ வலிக்கு பயந்து, உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி, தீக்குளித்துள்ளார். இதனையடுத்து, வலியால் அலறித்துடித்த சுஷ்மிதாவின் சத்தம் கேட்டு, பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
இதனையடுத்து, இவரை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், நேற்று சுஷ்மிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.