#IPL 2020: KKR கனவை தடுக்குமா CSK…?
இன்றயை ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.
இன்று ஐபிஎல் தொடரின் 49 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. கொல்கத்தா அணி இதுவரை 12 போட்டிகள் விளையாடி 6 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.
அதைபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகள் விளையாடி 4 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது. மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டி கொல்கத்தா அணிக்கு ஒரு முக்கியமான போட்டியாகும் இந்த போட்டியில் வெற்றிபெற்றால் புள்ளிபட்டியலில் 4 வது இடத்திற்கு சென்று விடும் இதனால் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை 22 போட்டிகள் நேருக்கு நேர் மோதியதில் கொல்கத்தா அணி 8 முறையும், சென்னை அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.