விடிய விடிய பெய்த கனமழையால் கடல் போல காட்சி தரும் சென்னை அண்ணா சாலை!

Default Image

விடிய விடிய பெய்த கனமழையால் கடல் போல காட்சி தரும் சென்னை அண்ணா சாலை, மக்கள் அவதி.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தான் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் நேற்று விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் விடாது பெய்த கன மழையில் சென்னை அண்ணாநகர் சாலையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது.  சென்னை டிஜிபி அலுவலகம் முன்னிலையில் மிக கனமழை பெய்து அங்கு 178 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 3 மணி நேரம் பெய்த மழைக்கு சென்னை தாங்கவில்லை என்றால் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் இனி தொடர்ச்சியாக மழை பெய்தால் சென்னையில் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்