விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!

Default Image

விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி அரசியல் பிரபலங்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பலரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகிற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில், ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடைபெற்றது.

 இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் உட்பட, 200 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்