நவம்பர் 30 வரை சர்வதேச வர்த்தக விமானங்கள் நிறுத்தம்.!
சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) திட்டமிடப்பட்ட சர்வதேச வணிக பயணிகள் விமானங்களுக்கான தடையை நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.
டி.ஜி.சி.ஏ ஒரு அறிக்கையில், திட்டமிடப்பட்ட சர்வதேச வணிக பயணிகள் சேவைகள் தடை அடுத்த மாதம் நவ.30-ம் தேதி வரை தொடரும் என்று விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச வணிக விமானங்களை விமான போக்குவரத்து இயக்குநரகம் அனுமதித்த விமானங்கள் தொடர்ந்து இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.