ரூ.1 லட்சத்தை கொடுத்து ஏழை மாணவனுக்கு உதவிய விஜய் மக்கள் இயக்கத்தினர்.!

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே. அவர்கள் பொது மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில், ஏழை சிறுவனின் மாற்று அறுவை சிகிச்சைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவியுள்ளனர். அதாவது, அந்த ஏழை மாணவனுக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்ததால் அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த ஏழை மாணவனின் மாற்று அறுவை சிகிச்சைக்கு வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் 1 லட்சம் ரூபாயை கொடுத்து உதவியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?
April 30, 2025