உச்சநீதிமன்ற உத்தரவு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்
உத்திர பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் கிராமத்தில் 17வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் அம்மாநில அரசே எரித்தது.
இவ்விவகாரம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டும் உ.பி அரசுக்கு எதிராகவும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியது.
இவ்விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றன் தாமே முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்தது.
இந்நிலையில் அலகபாத் உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தான் சிபிஐ விசாரணையானது நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மேலும் பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை பலப்படுத்தியுள்ளதாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..