#BiharElection2020 ஜனநாயக கடமை ஆற்றுங்கள்
இன்று பீகார் முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் வாக்குபதிவு தொடங்கியது. பாதுக்காப்பு பணியில் 30,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.பிரதமர் மக்கள் ஜனநாயக கடமை ஆற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாப் பரவலுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இச்சூழலில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது.இன்று 71 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பீகார் தேர்தலில் மொத்தவேட்பாளர் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மொத்த வாக்களர்கள் 2.14 கோடி.தேர்தலில் போட்டியிடுபர்வகளில் 31% பேர் மீது கிரீமினல் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.30,000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இனி பீகார் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 71 தொகுதிகள் குறித்த விவரம் இதோ:
ஆர்ஜேடி-41 தொகுதிகளிலும்,ஜேடியூ-41 தொகுதிகளிலும்,பாஜக 29 தொகுதிகளிலும் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், எல்ஜேபி-41 தொகுதிகளிலும் களம் காணுகின்றன.
இந்நிலையில் பீகார் முதற்கட்ட தேர்தலில் களத்தில் நிற்கும் பிரபலபங்களின் பட்டியல் இதோ:
பாஜக வேட்பாளராக காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஷ்ரேயாசி சிங் களத்தில் உள்ளார்.மேலும் முதலமைச்சர் நித்திஸ்குமாரின் அமைச்சரவையின் 6 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியும் முதல்கட்ட தேர்தலில் களம் காணுகின்றனர்.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.2ம் கட்ட வாக்குப்பதிவு நவ.,3ந்தேதி நடைபெறுகிறது.3ம்கட்ட வாக்குப்பதிவு நவ.,7ந்தேதி நடைபெறுகிறது.வாக்கு எண்ணிக்கை நவ.,10ந்தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதல் சுற்று வாக்களிப்பு நடைபெறுகிறது.கொரோனா பரவலுக்கு மத்தியில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெறுகிறது.
இந்த ஜனநாயக விழாவில் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன். தனி மனித இடைவெளி மற்றும் முகமூடி அணிவதை கவனத்தை வைத்திருங்கள், மக்கள் அனைவரும் வாக்களியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
बिहार विधानसभा चुनावों में आज पहले दौर की वोटिंग है।
सभी मतदाताओं से मेरा आग्रह है कि वे कोविड संबंधी सावधानियों को बरतते हुए, लोकतंत्र के इस पर्व में अपनी हिस्सेदारी सुनिश्चित करें।
दो गज की दूरी का रखें ध्यान, मास्क जरूर पहनें।
याद रखें, पहले मतदान, फिर जलपान!
— Narendra Modi (@narendramodi) October 28, 2020