தமிழக மீனவர்களை தாக்கிய சிங்களப்படை மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்- ராமதாஸ்
தமிழக மீனவர்களை தாக்கிய சிங்களப்படை மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது கச்சத்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கல் மற்றும் பாட்டில்களை வீசி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசி கொடூரமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் தாக்குதல்களை இனியும் மத்திய, மாநில அரசுகள் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழக மீனவர்கள் மீது கடந்த காலங்களில் சிங்களைப் படையினர் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.