சூரரைப் போற்று டிரைலரை புகழ்ந்த மாஸ்டர் இயக்குனர்…!

Default Image

சூரரைப் போற்று டிரைலரை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் டிரைலரை புகழ்ந்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். மேலும் ஜீவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் விமானத்தை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை வைத்து மையமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். இந்த திரைப்படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் நேரடியாக வருகின்ற நவம்பர் 12ம் தேதி அமேசான் பிரேமில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து நேற்று டிரைலர் வெளியானது. வெளியான சில மணி நேரத்திலே ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது இந்த டிரைலரை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் டிரைலரை புகழ்ந்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்