5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
அந்த வகையில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தேனி, நெல்லை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலையை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.