கள்ளத்தொடர்புடன் விலகியிரு… திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொலை!
கள்ளத்தொடர்புடன் விலகியிரு, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொலை செய்த கொடூரன் கைது.
அன்மை காலங்களாகவே கள்ளக் காதலும் அதனால் ஏற்படக்கூடிய கொலைகளும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் தற்பொழுது வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் எனும் கிராமத்தை சேர்ந்த 42 வயதான அன்பு எனும் கட்டிட தொழிலாளிக்கும், உடன் சேர்ந்து வேலை செய்யக்கூடியவர் வத்சலா எனும் கூலி தொழில் செய்யக்கூடிய பெண்ணுக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். நீண்ட ஆண்டுகளாகவே இருவரும் உல்லாசமாக நெருங்கி பழகி இருந்து வந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி வத்சலாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதனால் வேலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்நிலையில், காட்பாடி அடுத்த வள்ளிமலை அருகே ஒரு குகையில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று விசாரித்த போலீசார் குகைக்குள் அழுகிய நிலையில் கிடந்த பெண் காணவில்லை என்று தேடப்பட்ட வத்சலா என்பதை அறிந்து குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் அவரது கள்ளக்காதலன் அன்புவை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்தான் கொலை செய்ததாகவும், திருமணம் செய்யுமாறு அவர் தன்னை வற்புறுத்தியதனால் தான் இவ்வாறு செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் அன்புவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.