மனைவி சண்டையிட்டு அம்மா வீடு செல்ல, 10 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை!
மனைவி சண்டையிட்டு அம்மா வீடு செல்ல, 10 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.
கணவன் மனைவி என்றால் இருவருக்குள்ளும் சில சமயங்களில் புரிந்துணர்வு இல்லாததால் அல்லது கருத்து வேறுபாடு ஏற்படுவதன் காரணமாக சண்டைகள் வருவது வழக்கம். இதற்காக அடிக்கடி கணவரை விட்டு செல்வது தான் கணவர் வழி மாறுவதற்கும் பல இடங்களில் காரணமாக அமைகிறது. அதுபோல தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சேர்ந்த பள்ளி ஊராட்சிக் கோட்டை கிராமத்தில் வசித்து வரக்கூடிய சண்முகம் என்பவரின் மனைவி தனலட்சுமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 10 வயது மகளை கணவரிடம் விட்டுவிட்டு கருத்து வேறுபாடால் ஏற்பட்ட சண்டை காரணமாக அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சமாதனம் ஆகி மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதுபோல தான் இவர் அடிக்கடி செய்வாராம். அப்படி இந்த முறை 20 நாட்களாக அம்மா வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சண்டை முடிந்து சமாதானமாகி தனது வீட்டிற்கு வந்து பார்த்த தனலட்சுமிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தான் தாய் வீடு சென்றதும், தனது பத்து வயது மகளை அவர் கணவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு உள்ளார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோவில் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.