பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கிய இருவர் உயிரிழப்பு!
திருநல்லூரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கிய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய வருவதில் மனிதர்கள் ஈடுபடுவதால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது என்ற காரணத்திற்காக அரசாங்கத்தால் சில இயந்திரங்களும் விநியோகிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் வாகனங்கள் செல்ல முடியாத இடுக்குகளில் உள்ள பாதாள சாக்கடைகளை மனிதர்கள்தான் இறங்கி சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மணலி புதுநகர் பகுதியில் வேல்முருகன் தர்மராஜ் ஆகிய இரண்டு பேர் பாதாள சாக்கடை சுத்தம் செய்வதற்காக இறங்கியுள்ளனர்.
அப்பொழுது விஷவாயு தாக்கி இருவரும் மயக்கம் அடைந்துள்ளனர். இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மயக்கம் அடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர்கள் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவி உள்ளது.