ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி!
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால், 7,909,959 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும், இந்த வைரஸ் தாக்கி வருகிறது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அறிகுறி தென்பட்டுள்ளது. தற்போது நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்கிறேன். இருப்பினும் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த பதிவில், சமீபகாலங்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கவனமாக இருக்க வேண்டும் என்றும், வங்கியின் துணை கவர்னர்கள், அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன் என்றும், வழக்கம் போல் வாங்கி பணிகள் நடைபெறும் என்றும் பதிவிட்டுள்ளார்.