அவர்கள் அடித்த சிக்ஸர்களை நான் ரசித்தேன்- ஹர்திக் பாண்டியா..!

Default Image

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அடித்த சிக்ஸர்களை தான் ரசித்ததாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். 

நேற்று ஐபிஎல் தொடரின் 45 லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 195 ரன்கள் குவித்தனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா 21 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். ஆம் 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என மைதானத்தில் வன வேடிக்கை காட்டினார்.

மும்பை அணியை தொடர்ந்து  196 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலே 2 விக்கெட் இழந்தது, அடுத்ததாக தொடக்க ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் மிகவும் அதிரடியாக விளையாடினார்கள். மேலும் பேன்ஸ்டோக்ஸ் சதம் விளாசினார். அவரை தொடர்ந்து சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி 18. 2 ஓவரில் 2 விக்கெட்டை இழப்பிற்கு  196 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் இந்த போட்டி முடிவடைந்தவுடன் பேசிய மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்டியா கூறுகையில் ” ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதிர்ஷ்டம் அவர்களின் பக்கத்தில் இருந்தது. தொடக்கத்தில் நாங்கள் இரண்டு விக்கெட்கள் எடுத்தோம் அப்போது நாங்கள் வெற்றிபெற்றுவிடுவோம் என்று நினைத்தோம் . ஆனால் பென் ஸ்டோக்ஸ்  மற்றும் சஞ்சு சாம்சன் சிறப்பாக வியாடினார்கள். அவர்கள் அடித்த சிக்ஸர்களை நான் ரசித்தேன் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update