குவாலியரில் பாஜக, காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல்.!
மத்திய பிரதேசத்தில் நவம்பர் 3 ம் தேதி 28 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 10 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குவாலியரின் தப்ராவில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
நேற்று காலை 11.30 மணியளவில் இரு கட்சிகளின் தொண்டர்கள் இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரு கட்சித் தொண்டர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அப்போது இந்த மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி உமேஷ் தோமர் தெரிவித்தார்.