வெற்றிபெற்றால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன்
அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம்.அதன்படி முதல் மற்றும் மூன்றாவது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது.இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் டெலவார் ( Delaware) மாகாணத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குவதாக அறிவித்துள்ளார்.மேலும் அவர் பேசுகையில்,அமெரிக்காவில் இந்த கொடிய வைரசால் ஏற்கனவே 2 லட்சத்துக்கும் அதிகமான உயிர்கள் இறந்துள்ளது. இன்னும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இறக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ள எனவும் பேசினார.