ஒரே பிரசவத்தில் பிறந்த ஐவர்.! ஒரே நாளில் விமர்சையாக நடைபெற்ற மூவர் திருமணம்.!
கேராளாவின் திருவனந்தபுரத்தில் பிரேம் குமார் மற்றும் ரமாதேவி தம்பதியருக்கு கடந்த 1995ல் ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
உத்ரா, உத்ரஜா, உத்தாரா, உத்தாமா மற்றும் உத்ரஜன் என்ற பெயருடைய ஐவரையும் பலருடைய உதவியாலும் மிகவும் சிரமப்பட்டு வளர்த்து வந்தனர். அதனையடுத்து கடந்த 2005ஆம் ஆண்டு பிரேம்குமார் மரணமடைந்ததை அடுத்து பல தடங்கல்களை தாண்டி குழந்தைகளை படிக்க வைத்தார். கேரளாவின் மிகவும் பிரபலமான இந்த ஐவரையும் பஞ்சரத்னங்கள் என்று அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது 24 வயதாகும் இந்த நான்கு பெண் குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்த நிலையில் கொரோனா சூழல் காரணமாக ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருந்த திருமணம் தள்ளிப் போனது.
இந்த நிலையில், நால்வரில் மூன்று பேரின் திருமணம் குருவாயூரில் வைத்து நடைபெற்றுள்ளது. அதில் உத்ரஜா அவர்களின் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்து வர இயலாததால் மற்ற மூவரின் திருமணத்தை நடத்தியுள்ளனர்.