வாழ்க நீட்!! வளர்க தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்! – ராமதாஸ்

Default Image

ரூ. 3 கோடி வரை செலவழித்து மருத்துவர் ஆகும் ஒருவர் ஏழைகளுக்கு சேவை செய்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

தமிழ்நாட்டில், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கான கட்டணம் ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘ தமிழ்நாட்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான கட்டணம் ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம். ஒருவர் மருத்துவப் படிப்பை படித்து முடிக்க ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை செலவாகக்கூடும் என்றும், ரூ. 3 கோடி வரை செலவழித்து மருத்துவர் ஆகும் ஒருவர் ஏழைகளுக்கு சேவை செய்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

அப்படியானால் கிராமப்புற ஏழைகளுக்கு மருத்துவ சேவை எங்கிருந்து கிடைக்கும்? மருத்துவக்கல்வி வணிகமயமாவதை நீட் தடுக்கும் லட்சணம் இதுதானா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவம் படித்தால் கிராமப்புறங்களில் கருணையுடன் பணியாற்றுவார்கள். ஆனால், அதற்கான 7.5 இட ஒதுக்கீட்டையும் வழங்க மறுக்கிறார்கள். வாழ்க நீட்! வளர்க தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்