அர்மீனியா-அஜர்பைஜான் மோதல்: 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – ரஷ்ய அதிபர்

Default Image

அர்மீனியா – அஜர்பைஜான் இடையே நடந்த மோதலில் 4000 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் உள்ள நகோர்னோ-கராபத் பகுதிகளை 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது.

இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு செய்துவந்தது. இந்தநிலையில், நகோர்னோ-கராபத் பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக சிறியளவிலான மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 27 ஆம் தேதி அசர்பைஜான் ராணுவத்தினர், நகோர்னோ-கராபத் பகுதிகளில் திடீரென தாக்குதல் நடத்தினார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நகோர்னோ-கராபத் மாகாணத்தில் உள்ள அர்மீனிய ஆதரவு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். அந்த மோதல் போராக மாறிய நிலையில், பயங்கர ஆயுதங்களை கொண்டு இருதரப்பும் தாக்குதல் நடத்தினார்கள். இருதரப்பு மோதலில் கடுமையாக மோதிக்கொண்ட நிலையில், ராணுவ வீரர்கள் முதல் அப்பாவி மக்கள் வரை பலரும் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ளனர்.

இந்த போரை நிறுத்த இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே வந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை, 10 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த நிலையில், அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகள் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டனர்.

பேச்சுவார்த்தை நிறைவடைந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில், ஆனால் அஜர்பைஜான் நாட்டின் இரண்டாம் இரண்டாவது பெரிய நகரமான கஞ்சா மீது அர்மீனியப் படைகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து போர் நிறுத்தம் தொடர்பான புதிய ஒப்புதலுக்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்து, கடந்த 19 ஆம் தேதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்த மோதலில் 874 ராணுவ வீரர்கள் மற்றும் 37 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக நாகோர்னோ-கராபாக் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அஜர்பைஜான் நாட்டில் பொதுமக்கள் 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இந்தநிலையில், அர்மீனியா – அஜர்பைஜான் நாட்டிற்கு இடையிலான மோதலில் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
p chidambaram health
Lucknow Super Giants won
Saidai duraisamy
Carlsen Anna Cramling
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay