ரூ.25,000 கோடி இழப்பை சந்தித்த சுற்றுலாத்துறை – பினராயி விஜயன்

Default Image

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் காரணமாக பொருளாதரம் மீண்டெழுந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா காரணமாக கேரளாவில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கேரளா மாநில சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இதுகுறித்து கூறிய கேரள முதல்வர் பினராயி விஜயன்,  சுற்றுலாத்துறை கிட்டத்தட்ட ரூ.25,000 கோடி இழப்பை சந்தித்ததாகவும், இதனால், இது பெரும் வேலை இழப்புகளையும் ஏற்படுத்தியது என்று அவர் கூறினார். மேலும், கேரளாவில் சுற்றுலாத் துறையை உயர்த்துவதற்காக 26 புதிய திட்டங்களைத் தொடங்கி உள்ளார்.

இந்த திட்டங்கள், திருவனந்தபுரத்தில் உள்ள மலையக சுற்றுலா மையமான பொன்முடியில் இருந்து வடக்கு திசையில் காசராகோடு வரை பரவியுள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள போத்துண்டி மற்றும் மங்கலம் அணைகளில் உள்ள தோட்டங்களும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்