போலி கொரோனா சான்றை பயன்படுத்தி இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்.!

Default Image

போலி கொரோனா சான்றை பயன்படுத்தி பாகிஸ்தானியர்கள் பலர் இங்கிலாந்திலிருந்து தங்கள் நாட்டுக்கு செல்வதாக விமானத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்து வருவதால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் மக்களுக்கு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

தற்பொழுது, போக்குவரத்தில் இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இந்நிலையில் மக்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் பொழுது கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் செல்லக்கூடிய பயணிகள் 96 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட சான்றிதழ்களுடன் தான் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உண்மையாக பரிசோதித்து சான்றிதழ் வாங்காமல், 150 பவுண்டு லஞ்சமாக கொடுத்து போலியான சான்றிதழ்களை பெற்று அதன்மூலம் இங்கிலாந்தில் இருந்து பலர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது தற்பொழுது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்