பட்டாசு ஆலை வெடிவிபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் சிவகாசியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவருக்குச் சொந்தமான ராஜேஸ்வரி என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது.
இன்று உராய்வு ஏற்பட்டு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் எனவும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஊழியர்கள் பாதுகாப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். பட்டாசு ஆலை விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025