இந்த வருஷம் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் வருகிறாள்..!

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி தினத்தன்று “டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்” OTT இணையத்தில் வெளியாகும் என்று ஆர்.ஜே பாலாஜி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா அம்மன் நடித்துள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்று உள்ளது இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஓடிடி இணையத்தில் வெளியாக உள்ளதாக ஆதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம் இந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் 20 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இது மட்டுமின்றி மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டப்பிங் ரைட்ஸ் உரிமையை சுமார் 1 கோடியே 20 லட்சம் வரை விற்பனை ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆர்.ஜே பாலாஜி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது, இந்த வருஷம் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் வருகிறாள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வருஷம் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் வருகிறாள்..! ????#MookuthiAmman #DiwaliRelease on Disney Plus Hotstar Vip..! ❤️ pic.twitter.com/Vefv0NPhHl
— RJ Balaji (@RJ_Balaji) October 23, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025